×

தக்காளி ரசம், அரைச்சிவிட்ட சாம்பார், கடலை குருமா!... இரவு விருந்தில் சீன அதிபருக்கு பரிமாற இருக்கும் தமிழக பாரம்பரிய உணவு வகைகள்

சென்னை: சென்னை வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு இன்று இரவு விருந்தாக தமிழக பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படுகிறது. குறிப்பாக தக்காளி ரசம், அரச்சுவைத்த சம்பார் மற்றும் கவனரசி அல்வா உள்ளிட்டவை பரிமாறப்பட உள்ளது.

பிரதமர் மோடி - சீனா அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான முறைசாரா சந்திப்பு


இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான இரண்டாவது முறைசாரா உச்சிமாநாடு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடக்கிறது..வழக்கமான இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பில் நடக்க இருக்கும் ஒப்பந்தம் கையெழுத்து, கூட்டறிக்கை ஆகியவை இந்த வகையான நட்புரீதியிலான சந்திப்பு இருக்காது.சில முக்கிய விவகாரங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் பேச உள்ளனர். மேலும், மாமல்லபுரத்தில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளை கண்டுகளிக்கின்றனர்.

காஞ்சி தலைவன் பூமியில் செஞ்சீன தலைவன்!! :

இதற்காக இன்று மதியம் 12.30 மணி அளவில் பிரதமர் நரேந்திரமோடி வருகை தந்தார். அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் உள்பட முக்கிய பிரமுகர்கள் நேரில் வரவேற்றனர். இதையடுத்து பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கோவளம் புறப்பட்டு சென்றார்.  இதன்பின்னர் மதியம் 1.30 மணிஅளவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனி விமானத்தில் சென்னை வந்திறங்கினார். அவருக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சீனாவில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட காரில் கிண்டியில் உள்ள ஐடிசி ஓட்டலுக்கு அதிபர் ஜி ஜின்பிங் புறப்பட்டு சென்றார்.மாமல்லபுரத்தில் இன்று மாலை சுமார் 6 மணி நேரம் இரு நாட்டு தலைவர்களும் சுற்றி பார்த்தபடி சந்தித்து பேசுகிறார்கள். அத்துடன் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் சுமார் 40 நிமிடம் தனியாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

விருந்தில் தமிழக பாரம்பரிய உணவுகள்

இதையடுத்து இரவு கிண்டியில் உள்ள ஹோட்டலுக்கு திரும்பும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு இரவு உணவாக தமிழக பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட உள்ளன. அவருக்கு இன்று இரவு உணவில், தக்காளி ரசம், அரச்சுவைத்த சம்பார், கடலை குருமா மற்றும் கவனரசி அல்வா உள்ளிட்டவை பரிமாறப்பட உள்ளது.  இரு தரப்பில் இருந்தும் 18 பேர் இந்த விருந்தில் பங்கேற்கின்றனர். பகல் மற்றும் இரவு விருந்திற்காக சீன அதிபருக்கு மொத்தம் 28 வகையான உணவுகள் பரிமாறப்பட உள்ளன. தமிழக உணவுகளுடன், சீன உணவுகளும் இந்த 28 வகையான உணவுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. காரைக்குடி செட்டிநாடு உணவு வகைகள் அனைத்தும் பரிமாறப்பட உள்ளன. தமிழகம் பொதுவாக சாப்பாட்டுக்கு பெயர்போனது. அவர் தமிழக உணவுகளை சாப்பிட்டுவிட்டு நிச்சயம் அற்புதம் என பாராட்டத்தான் போகிறார்.

Tags : Peanut Kurum , Prime Minister Modi, President of China, Xi Jinping, Traditional, Foods
× RELATED இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே பிரதமர் மோடி...